மைக்ரோ சிப் பொருத்திய புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!

PARIS TAMIL  PARIS TAMIL

 இலங்கையில் வழங்கப்படும் கடவுச்சீட்டில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
புதிய கடவுச்சீட்டில், உரிமையாளர்களின் தகவல்கள் அடங்கிய இலத்திரனியல் சிப் பொருத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நடைமுறை காரணமாக போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
 
மைக்ரோ சிப்பில் கைவிரல் அடையாளம் உட்பட தனிப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் தொலைந்த சந்தர்ப்பத்தில் உரிமையாளர் இலகுவாக புதிய ஆவணங்கள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
 
மேலதிக பாதுகாப்பு விடயங்கள் காரணமாக அந்த விமான கடவுச்சீட்டுகள் உலகின் உயர் வரவேற்பை பெறும் என நம்பப்படுகின்றது.
 
இந்த கடவுசீட்டு 10 வருடங்களுக்கு செல்லுப்படியாகும்.
 
புதிதாக விமான கடவுச்சீட்டு பெற்றுக் கொள்பவர்களுக்கு அதற்கான மேலதிக விடயங்களை கொண்ட இந்த புதிய கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது.
 
பழைய கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் அது செல்லுப்படியாகும் திகதி நிறைவடையும் வரை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை