ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு

தினமலர்  தினமலர்
ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு

புதுடில்லி: கடன் சுமையில் சிக்கி தவிக்கும் 'ஏர் இந்தியா'வின் பங்குகளை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிமான அளவுக்கு கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்கா கூறியது, பெரும் கடன் சுமையில் திணறும் ஏர் இ்ந்தியாவின் பங்குகள் நான்கு நிறுவனங்களாக பிரித்து விற்பனை செய்யப்படும் அதற்கான பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்..மேலும்
தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரே நிறுவனமாக விற்கப்படும் என்றார்.

மூலக்கதை