வெண்ணையும், சுண்ணாம்பும்: குறைகேட்பு கூட்டத்தில் பாரபட்சம் என, புகார்:கிராம மக்களை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
வெண்ணையும், சுண்ணாம்பும்: குறைகேட்பு கூட்டத்தில் பாரபட்சம் என, புகார்:கிராம மக்களை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருப்பூர் ;பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கிராமப்புற மக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்@தாறும் திங்கட்கிழமை, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆகியோர், மக்களிடம் இருந்து மனுக்களை பெறுகின்றனர்.மாவட்டம் துவங்கிய நாளில் இருந்து, தற்போதைய கலெக்டர் பொறுப்பேற்கும் வரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், இவர்களுடன் சேர்த்து மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
கடந்த சில மாதங்களாக, திட்ட இயக்குனர் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்பதில்லை. கிராமப்புற மக்களுக்கு பிரச்னை அதிகம் என்பதால், அதிக எண்ணிக்கையான மக்கள் கிராமங் களில் இருந்து வந்து மனு கொடுக்கின்றனர். உள் ளாட்சி தேர்தல் நடத்தாமல், கடந்த ஓராண்டாக, ஊராட்சி மக்கள் ஆயிரக்கணக்கான பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.தனி அலுவலர் பொறுப்பில் இருந்தாலும், குடிநீர் வினியோகத்தை கூட ஒழுங்குபடுத்த முன்வருவதில்லை. தெருவிளக்கு பராமரிப்பும் படுமோசமாக உள்ளது. இந்நிலையில், குடிநீர் பிரச்னை, ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அத்யாவசிய பிரச்னைகளுக்காக மக்கள், ஒவ்வொரு வாரமும் மனு கொடுக்கின்றனர்.
மனுக்கள், உடனடியாக பி.டி.ஓ., கைகளுக்கு சென்றாலும், தீர்வு என்ப@த கிடைப்பதில்லை. சமூக பாதுகாப்பு பிரிவின், மக்கள் குறைகேட்பு இணையத்தில், நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மட்டும் பதிவாகிறது. மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் பிரச்னைகளில், ஒருசில வற்றுக்கு தீர்வு வழங்கி வருகிறது.
இருப்பினும், கிராமப்புற மக்களுக்கு சரியான தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை. பொருளாதார பலத்தில் பின்தங்கியுள்ள, அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாத ஊராட்சிகள், பரிதவித்து கொண் டிருக்கின்றன. அங்குள்ள மக்களின் நிலையை வார்த்தைகளால் கூற முடியாது. கடந்த, 2017ம் ஆண்டு நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டங்களில், 7,387 மனுக்கள் பெறப்பட்டுள்ளன; ஒரு லட்சம் மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்களை கொடுத்துள்ளனர். இருப்பினும், ஊரகப்பகுதிக்கு நிவாரணம் கிடைக்கவே இல்லை என்பது, அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அர சியல் கட்சியினரின் தூண்டுதலால், கடந்த ஆண்டில் மட்டும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனுகொடுத்தனர்.குறைகேட்பு கூட்டம் நடக்கும் நாளில், தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்தி, பட்டா கோரும் மனுக்கள் பெறப்பட்டது. அதற்காக, உடனடியாக தீர்வு வழங்க முடியாது என்றாலும் கூட, முறையாக பதில் அனுப்பி, மனுக்கள் தாசில்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறைகேட்பு கூட்டத்தால், ஒரு தரப்பு மக்கள் பயனடைந்து வந்தாலும், கிராமப்புற மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், "ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், ஒரு கண்ணுக்கு ”ண்ணாம்பும், என்ற கிராமத்தில் கூறுவது @பால், அதிகாரிகளின் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று @மடையில் மட்டும் öŒான் னால் @பாதாது. கிராமப்புற மக்களுக்கு @தவையான வŒதிகளை öŒ#ய அதிகாரிகள் முன்னுரிமை வழங்க @வண்டும்,' என்றனர்.

மூலக்கதை