சுலபமாக தொழில் துவங்கலாம்: இஸ்ரேலுக்கு இந்தியா உறுதி

தினமலர்  தினமலர்
சுலபமாக தொழில் துவங்கலாம்: இஸ்ரேலுக்கு இந்தியா உறுதி

புதுடில்லி:‘இந்­தி­யா­வில் தொழில் துவங்­கு­வ­தில், இஸ்­ரேல் நிறு­வ­னங்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு, விரை­வில் தீர்வு காணப்­படும்’ என, மத்­திய அரசு உறுதி அளித்­துள்­ளது.இஸ்­ரேல் பிர­த­மர், பென்­ஜ­மின் நெதன்­யாஹு, நான்கு நாட்­கள் அரசு முறை பய­ண­மாக, இந்­தியா வந்­துள்­ளார். அவ­ரு­டன், 102 நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த, 130 தொழி­ல­தி­பர்­கள் குழு வந்­துள்­ளது.
இந்­நி­லை­யில், சி.ஐ.ஐ., சார்­பில், டில்­லி­யில், இந்­தியா – இஸ்­ரேல் வர்த்­தக கருத்­த­ரங்கு நடை­பெற்­றது. இதில், மத்­திய தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை செய­லர், ரமேஷ் அபி­ஷேக் பேசி­ய­தா­வது:இந்­தி­யா­வில் தொழில் துவங்க, ஒரு­சில அம்­சங்­கள் தடை­யாக உள்­ள­தாக, இஸ்­ரேல் நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன .
குறிப்­பாக, தொழில் உரி­மம், விண்­ணப்­பங்­கள் பரி­சீ­லனை, சுங்க வரி மற்­றும் இதர வரி­கள் குறித்து, ஐயம் எழுப்பி உள்ளன.இந்த பிரச்­னை­கள் அனைத்­திற்­கும், சம்­பந்­தப்­பட்ட துறை­கள் மூலம் தீர்வு காணப்­படும் என, நான், இஸ்­ரேல் நிறு­வ­னங்­க­ளுக்கு உறுதி அளிக்­கி­றேன். அவை, இந்­தி­யா­வில் சுல­ப­மாக தொழில் துவங்கி, மேம்­பட்ட வளர்ச்சி காண­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை