மன்னா புட்ஸ் நிறுவனத்தில் மார்கன் ஸ்டான்லி முதலீடு

தினமலர்  தினமலர்
மன்னா புட்ஸ் நிறுவனத்தில் மார்கன் ஸ்டான்லி முதலீடு

சென்னை:தென்­னிந்­தி­யா­வில், இயற்கை ஆரோக்­கிய உண­வுப் பொருட்­களை விற்­பனை செய்து வரும், மன்னா புட்ஸ் நிறு­வ­னத்­தில், மார்­கன் ஸ்டான்லி பிரை­வேட் ஈக்­கி­யூட்டி ஆசியா நிறு­வ­னம், 132 கோடி ரூபாயை முத­லீடு செய்­துள்­ளது.
இது குறித்து, மன்னா புட்ஸ் நிறு­வ­னர், ஐ.எஸ்.கே.நாசர் கூறி­ய­தா­வது:செயற்கை உண­வுப் பொருட்­களை தவிர்த்து, இயற்­கை­யான பாரம்­ப­ரி­ய­மிக்க உண­வுப் பொருட்­களை தயா­ரித்து வழங்­கு­வதை இலக்­காக கொண்டு செயல்­ப­டு­கிறது, மன்னா புட்ஸ் நிறு­வ­னம். இந்­நி­லை­யில், மார்­கன் ஸ்டான்லி நிறு­வ­னம், எங்­க­ளது நிறு­வ­னத்­தில், 152 கோடி ரூபாயை முத­லீடு செய்து, எங்­க­ளு­டன் பங்­கு­தா­ர­ராக இணைந்­துள்­ளது.
இந்­திய சந்­தை­யில், ஆரோக்­கிய உண­வுப் பொருட்­களை பர­வ­லாக கொண்டு செல்­வ­தற்கு வலு சேர்ப்­ப­தாக, இந்த முயற்சி அமை­யும். குறிப்­பாக, தென்­னிந்­தி­யா­வில், எங்­க­ளது வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு, இந்த நிதி பயன்­ப­டுத்­திக் கொள்­ளப்­படும்.
மார்­கன் ஸ்டான்லி இணை தலை­வர், அர்­ஜுன் செய்­கல் கூறு­கை­யில், ‘‘உள்­நாட்­டில் விளை­யும் தானிய வகை­களை கொண்டு, சத்­தான உண­வுப் பொருட்­களை, குறைந்த விலை­யில், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­க­வும், மன்­னா­வின் வளர்ச்­சியை அடுத்­த­கட்­டத்­துக்கு எடுத்­துச் செல்­ல­வும், இந்த கூட்டு முயற்சி உத­வி­யாக இருக்­கும்,’’ என்­றார்.ஏற்­க­னவே, மன்னா புட்ஸ், அதன் விரி­வாக்க திட்­டங்­க­ளுக்­காக, 2015ல், பில்­கி­ரம் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து, 30 கோடி ரூபாய் நிதியை பெற்­றுள்­ளது.

மூலக்கதை