35 ஆயிரம் புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்

தினமலர்  தினமலர்
35 ஆயிரம் புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்ந்து 34,801.74-ஆகவும், நிப்டி 52.15 புள்ளிகள் உயர்ந்து 10,733.40-ஆகவும் வர்த்தகமாகின.தொடர்ந்து காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 332.65 புள்ளிகள் உயர்ந்து 34,925.04-ஆகவும், நிப்டி 93.75 புள்ளிகள் உயர்ந்து 10,775-ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவது, மேக்ரோ பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பங்கச்சந்தைகள் உயர்ந்து வருவதால் விரைவில் சென்செக்ஸ் 35 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை