ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம்

தினமலர்  தினமலர்
ஆயுள் காப்­பீடு பெறும் போக்கில் மாற்றம்

இந்­தி­யர்கள் ஆயுள் காப்­பீட்டை அணுகும் விதத்தில் முக்­கிய மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.
இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம் வெளி­யிட்­டுள்ள தக­வலின் படி, 2016 – 17ம் ஆண்டில், முந்­தைய ஆண்­டுடன் ஒப்­பிடும் போது மொத்த பாலி­சிகள் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. எனினும், இதே காலத்தில் பாலி­சி­க­ளுக்­கான காப்­பீடு தொகை மதிப்பு, 14 சத­வீதம் அதி­க­ரித்­து உள்­ளது.
இது காப்­பீடு பெறு­வதில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை உணர்த்­து­வ­தா­கவும், பாலி­சி­களை வரிச்­சலுகை நோக்கில் மட்டும் பார்க்­காமல், பாது­காப்பு நோக்கில் பலரும் அணு­கு­வதை இது உணர்த்­து­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
பிரீமியம் வரு­வாயில் எல்.ஐ.சி., 12.78 சத­வீத வளர்ச்­சியை பெற்­று உள்­ளது. தனியார் நிறு­வ­னங்கள், 17.40 சத­வீத வளர்ச்சி பெற்­றுள்­ளன. இந்­தி­யாவில், 24 ஆயுள் காப்­பீடு நிறு­வ­னங்கள் உட்பட மொத்தம், 62 காப்­பீடு நிறு­வ­னங்கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

மூலக்கதை