புது­மண தம்­ப­தியர் மனதில் கொள்ள வேண்­டிய நிதி விஷ­யங்கள்

தினமலர்  தினமலர்
புது­மண தம்­ப­தியர் மனதில் கொள்ள வேண்­டிய நிதி விஷ­யங்கள்




*புதிய வாழ்க்­கையை துவக்கும் புது­மண தம்­ப­தியர் தங்கள் எதிர்­காலம் தொடர்­பான பல விஷ­யங்­களை திட்­ட­மி­டு­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர். இதற்­காக பல­வற்றை மனம் விட்டு பேசவும் செய்­கின்­றனர். இதில் நிதி விஷ­யங்­க­ளையும் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். மண­மக்கள் தங்­க­ளுக்­கான நிதி கொள்­கையை வகுத்­துக்­கொள்­வது, எதிர்­கால வளத்­திற்கு வழி­வ­குக்கும்.
*மண­மக்கள் இரு­வரும் வேறு­ வேறு பொரு­ளா­தார பின்­னணி கொண்­டி­ருக்­கலாம். பொரு­ளா­தார பின்­னணி ஒன்­றாக இருந்தால் கூட செலவு பழக்­கங்கள் மாறு­பட்­டி­ருக்­கலாம். எனவே, தங்கள் வரு­மானம் மற்றும் வாழ்க்கை முறை எதிர்­பார்ப்­புகள் குறித்து மனம்­விட்டு பேசி, அதற்­கேற்ற பட்­ஜெட்டை வகுத்­துக்­கொள்ள வேண்டும். பொது­வான சேமிப்பு கணக்கு வைத்­துக்­கொள்­வதன் மூலம் குடும்ப செல­வு­களை திறம்­பட நிர்­வ­கிக்­கலாம்.

*எதிர்­கா­லத்தில் வீடு, வாகனம் போன்­ற­வற்றை வாங்­கு­வது பற்றி பேசு­வது போல், ஏற்­க­னவே கடன் பொறுப்­புகள் இருந்தால் அதை பரஸ்­பரம் பகிர்ந்து கொள்ளவேண்டும். கல்­விக்­கடன் போன்ற விப­ரங்­களை தெரி­விக்க வேண்டும். பெற்­றோருடன் இணைந்து சொத்­துகள் வாங்­கி­யி­ருந்­தாலும் அதை தெரி­விக்க வேண்டும். மாதாந்­திர கடன் தவ­ணையை திட்­ட­மி­டு­வதில் இது உதவும்.பின்னர் பிரச்னை வரு­வ­தையும் தவிர்க்­கலாம்.
*திரு­மண உற்­சா­கத்­திற்கு மத்­தியில் தங்­க­ளுக்­கான நிதி இலக்­கு­களை அமைத்­துக்­கொள்­ளவும் மறக்க கூடாது. நிதி இலக்­கு­க­ளுக்­கான காலம், அவற்­றுக்­கான சேமிப்பு மற்றும் முத­லீட்டு திட்­டங்கள் குறித்தும் பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கு என்ன அவ­சரம் என நினைக்­காமல், முத­லி­லேயே நிதி இலக்­கு­களை தீர்­மா­னித்து செயல்­ப­டு­வது, செலவு பழக்­கங்­களை கட்­டுப்­ப­டுத்­தவும் கைகொ­டுக்கும்.
*தம்­ப­தி­யரில் இரு­வ­ருக்­குமே நிதி பொறுப்­புகள் இருக்­கலாம். தங்­களை சார்ந்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு பொரு­ளா­தார நோக்கில் உதவி செய்ய வேண்­டிய சூழல் இருக்­கலாம். இது குறித்து வெளிப்­ப­டை­யாக துணை­யிடம் பேசி விடு­வது நல்­லது. குடும்­பத்­தி­ன­ருக்கு உத­வு­வது தனிப்­பட்ட விருப்பம் சார்ந்­தது என்­றாலும், தம்­ப­தியர் இது குறித்து மனம் திறந்து பேசிக்­கொள்­வது நல்­லது.
*திரு­ம­ண­மான பிறகு கணவன், -மனை­வியில் ஒருவர் நிதி விஷ­யங்­களை கவ­னித்­துக்­கொள்­வது வழக்கம். முத­லீடு விஷ­யங்­களை பெரும்­பாலும் கணவர் கவ­னித்­துக்கொள்­ளலாம். ஆனால், கணவன், மனைவி இரு­வ­ருமே நிதி விஷ­யங்­களை அறிந்­தி­ருப்­பது நல்­லது. நிதி முடி­வு­களை இரு­வரும் விவா­தித்து கூட்­டாக மேற்­கொள்­வது சிறந்­தது. சேமிப்பு, முத­லீடு, கடன்கள், காப்­பீடு பற்றி இரு­வரும் அறிந்­தி­ருக்க வேண்டும்.

மூலக்கதை