சம்­பள உயர்வு எவ்­வ­ளவு?

தினமலர்  தினமலர்
சம்­பள உயர்வு எவ்­வ­ளவு?

தமிழ்­நாடு எம்.எல்.ஏ.களுக்கு மட்­டும்­தான் சம்­பள உயர்வா, நமக்கு இல்­லையா என்று மத்­தி­ய­மர்­கள் ஏங்க வேண்­டாம். பல்­வேறு தொழிற்­து­றை­யி­னர் மத்­தி­யில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று, நல்ல செய்­தி­யைச் சொல்­கிறது. இந்த ஆண்டு சம்­பள உயர்­வு­கள் எப்­படி இருக்­கப் போகின்றன?
‘மெர்­சர்’ என்ற அமைப்பு, ‘இந்­தியா டோட்­டல் ரெமு­ன­ரே­ஷன் சர்வே’யை ஒவ்­வொரு ஆண்­டும் நடத்தி, முடி­வு­களை வெளி­யிட்டு வரு­கிறது. இந்த ஆண்டு, இந்த அமைப்பு பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, 791 நிறு­வ­னங்­க­ளி­டம் மேற்­கொண்ட ஆய்­வில், பல சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் வெளி­யா­கி­உள்ளன. அதில் முக்­கி­ய­மா­னது, சம்­பள உயர்வு.
சுமார், 10 சத­வீத அள­வுக்கு சம்­பள உயர்வு தரு­வ­தற்கு இந்த நிறு­வ­னங்­கள் திட்­ட­மிட்­டுள்ளன. சென்ற ஆண்­டு­களில், 8 முதல் 13 சத­வீ­தம் வரை சம்­பள உயர்வு வழங்­கு­வது என்ற திட்­ட­மி­ருந்­தது. இந்த ஆண்டு, வளர்ச்சி சூழ்­நிலை சுமு­க­மா­கி­யுள்­ள­தால், 10 சத­வீத சம்­பள உயர்வு நிச்­ச­ய­மா­கி­யுள்­ளது.
10 சத­வீத சம்­பள உயர்வு என்­பது மிகப்­பெ­ரி­யதா? ஆமாம். வில்­லிஸ் டவர்ஸ் வாட்­சன் என்ற மற்­றொரு அமைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை, இப்­ப­டித்­தான் தெரி­விக்­கிறது. அதா­வது ஆசிய பசி­பிக் பகு­தி­யில், இந்­தி­யா­வில் தான் அதி­க­பட்ச சம்­பள உயர்வு இருக்­கப் போகி­ற­தாம்.இந்­தோ­னே­சி­யா­வில் சம்­பள உயர்வு, 8.5 சத­வீ­த­மாக இருக்க, சீனா­வில், 7 சத­வீ­தம், பிலிப்­பைன்­ஸில், 6 சத­வீ­தம், ஹாங்­காங் மற்­றும் சிங்­கப்­பூ­ரில் இது, 4 சத­வீத அள­வுக்கே இருக்­கப் போகின்றன. அத­னோடு ஒப்­பி­டும்­போது, இந்­திய நிறு­வ­னங்­கள் கூடு­த­லான உயர்­வையே வழங்­க­வுள்ளன.
சம்­பள உயர்­வி­லும் துறைக்­குத் துறை மாறு­பா­டும், பல்­வேறு படி­நி­லை­களில் வேறு­பா­டும் இருக்­கப்­போ­கிறது. இடை­நிலை மேலா­ளர்­கள் மத்­தி­யில் கூட சாதா­ர­ண­மான வேலை­செய்­ப­வர்­கள், 2 – 3 சத­வீத உயர்வு வழங்­கப்­பட, நன்­றா­கச் செயல்­பட்­ட­வர்­கள் 15 சத­வீத அள­வுக்கு உயர்வு கொடுக்­கப்­பட வாய்ப்­புண்டு என்று கூறு­கிறது வில்­லிஸ் டவர்ஸ் வாட்­சன்.புதிய வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கம் பற்­றிய ‘மெர்­சர்’ தெரி­விக்­கும் தக­வ­லும் மகிழ்ச்சி அளிக்­கிறது. ஆய்­வு­செய்­யப்­பட்ட, 791 நிறு­வ­னங்­களில், 55 சத­வீத நிறு­வ­னங்­கள், புதிய நபர்­களை வேலைக்கு எடுத்­துக்­கொள்ள உத்­தே­சித்­தி­ருக்­கின்றன.
சென்ற ஆண்டு, 48 சத­வீத நிறு­வ­னங்­களே புதிய வேலை­களை உரு­வாக்க முன்­வந்­தி­ருந்­தன. இம்­முறை நிலைமை மாறி­யி­ருப்­ப­தால், நிறு­வ­னங்­க­ளுக்கு நம்­பிக்கை பிறந்­தி­ருக்­கிறது. அத­னால், ஆளெ­டுப்­பின் எண்­ணிக்­கை­யும் உயர்­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது.இது வழக்­க­மான ஓய்வு பெற்­ற­வர்­கள் மற்­றும் வேலையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­க­ளுக்­கான ‘மாற்று நபர்’ என்று சொல்­லப்­படும் ரீப்­ளேஸ்­மென்ட் ஆளெ­டுப்பு அல்ல; முற்­றி­லும் புதிய பத­வி­கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­த­னால், ஏற்­பட்­டுள்ள ஆளெ­டுப்பு.

எந்­தெந்த துறை­களில் ஆளெ­டுப்பு நடக்­கப் போகிறது? சில்­லறை வர்த்­த­கம், எப்.எம்.சி.ஜி., உற்­பத்­தித் துறை மற்­றும் மருந்­து­கள் தயா­ரிப்­புத் துறை ஆகி­ய­வற்­றில் வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கி­யுள்ளன. அதே­போல், சப்ளை செயின் திட்­ட­மி­டல், அனா­லி­டிக்ஸ், டிமாண்ட் பிளா­னிங், கம்ப்­யூட்­டர் இமே­ஜரி, ஸ்டோர் டிசைன், வர்த்­த­க­வி­யல் போன்ற துறை­களில் புதிய வேலை­கள் உரு­வா­கி­யுள்ளன.
செயற்கை நுண்­ண­றிவு, கணினி கற்­பித்­தல், தானி­யங்கி தொழில்­நுட்­பம், ரோபோ­டிக்ஸ், இன்­டர்­நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய நவீ­ன­கால சவால்­கள் பெரு­கி­வ­ரு­வ­தால், தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் உள்­ள­வர்­கள், தங்­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டிய தேவை உரு­வா­கி­யுள்­ளது. இன்­றைய கால­கட்­டத்­துக்­கான திறன்க­ளோ­டும் படிப்­பு­க­ளோ­டும் வரு­ப­வர்­க­ளுக்கே, வேலை­வாய்ப்­புக்­கான கத­வு­கள் திறந்­துள்ளன.
வேலை­வாய்ப்­பில் உள்ள மற்­றொரு அள­வீ­டும் முக்­கி­ய­மா­னது. அது ‘அட்­ரி­ஷன்’ என்று ஆங்­கி­லத்­தில் குறிப்­பி­டப்­படும் வேலை­யை­விட்­டுச் செல்­ப­வர்­களின் எண்­ணிக்கை. அது, 1.8 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. 2017ல் 13.3 சத­வீ­த­மாக இருந்த அட்­ரி­ஷன், 2018ல் 11.5 சத­வீ­த­மா­கக் குறைந்­துஉள்­ளது.இதற்கு முக்­கிய கார­ணம், நிறு­வ­னங்­கள், தகு­தி­யுள்ள நபர்­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்ள மேற்­கொண்­டி­ருக்­கும் நட­வ­டிக்கை.
தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளான இன்­போ­சிஸ், டி.சி.எஸ். ஆகி­யவை, சமீ­பத்­தில் வெளி­யிட்ட மூன்­றாம் காலாண்­டுக்­கான அறிக்­கை­களில், பணி­யா­ளர்­க­ளைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­குச் செய்­தி­ருக்­கும் செல­வு­க­ளைக் குறிப்­பிட்­டுள்ளன.குறிப்­பாக, ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டுத் துறை (ஆர்.& டி.) மற்­றும் விற்­ப­னைத் துறை­யைச் சேர்ந்­த­வர்­கள் தொடர்ந்து ‘தாவி’க்கொண்டே இருக்­கி­றார்­கள்.
அவர்­க­ளைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­து­தான், சவா­லாக இருக்­கிறது என்று தெரி­விக்­கின்றன, ஐ.டி., நிறு­வ­னங்­கள். இன்­போ­சி­ஸில், 2017 – -18 இரண்­டாம் காலாண்­டில், 17.2 சத­வீ­த­மாக இருந்த அட்­ரி­ஷன், மூன்­றாம் காலாண்­டில், 15.8 சத­வீ­த­மா­கக் குறைந்­து உள்­ளது. டி.சி.எஸ்., முற்­றி­லும் வேறொரு அணு­கு­மு­றை­யைப் பின்­பற்­று­கிறது. சென்ற ஆண்­டு­களில், கல்லுா­ரி­க­ளி­லேயே சென்று ஆளெ­டுப்பு நடத்தி, ஆபர் கடி­தங்­களை வழங்கி, பின்­னர் வேலைக்­குச் சேர்த்­துக்­கொண்­டன.
இதன்­மூ­லம், எப்­போ­தும் ஒரு குறிப்­பிட்ட அள­வி­லான பணி­யா­ளர்­கள் ‘பெஞ்ச்’ என்று சொல்­லப்­படும் ‘காத்­தி­ருப்­பில்’ இருப்­பார்­கள். இப்­போது அந்த நிலை மாறி­விட்­டது. தேவை ஏற்­ப­டும்­போது, புதிய பணி­யா­ளர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­கிறது, டி.சி.எஸ்.,இதன் தொடர்ச்­சி­யாக புரிந்­து­கொள்­ள­வேண்­டிய இன்­னொரு அள­வீ­டும் முக்­கி­ய­மா­னது. அதற்கு பணி­யா­ளர் பய­னீட்டு அளவு (எம்ப்­ளாயீ யுடி­லை­சே­ஷன் லெவல்) என்று பெயர். டிசம்­பர் காலாண்­டில் இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் பணி­யா­ளர் பய­னீட்டு அளவு 84.9 சத­வீ­தம். ஆறு மாதங்­க­ளுக்கு முன் இதுவே, 81.9 சத­வீ­த­மாக இருந்­தது.
அதா­வது நூறு பேரில், 85 பேர், இன்­போ­சிஸ் நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் நேர­டி­யாக வேலை செய்­கி­றார்­கள். மீத­முள்ள பதி­னைந்து பேர் ஒன்று ‘காத்­தி­ருப்­பில்’ வைக்­கப்­பட்­டுள்­ளார்­கள், அல்­லது நிறு­வ­னத்­தின் சொந்த திட்­டங்­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பார்­கள். பய­னீட்டு அளவை அதி­க­ரிப்­ப­தில்­தான் நிறு­வ­னங்­கள் முனைப்­போடு இருக்­கின்றன.
இவை தனி­யார் துறை, தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் ஏற்­ப­டக்­கூ­டிய சம்­பள உயர்­வு­கள் பற்­றிய தக­வல்­கள். இந்­திய அள­வில் இத்­து­றை­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றம் மற்­றும் நம்­பிக்­கை­யி­னால் இத்­த­கைய கணிப்­பு­கள் செய்­யப்­ப­டு­கின்றன.
பண­வீக்­கத்­தை­யும் விலை­வாசி உயர்­வை­யும் சமா­ளிக்க மட்­டுமே, இத்­த­கைய உயர்­வு­கள் போது­மா­னவை. உண்­மை­யான தனி­ந­பர் வளர்ச்சி என்­பது இதற்கு அப்­பு­றம், கையில் தேங்­கக்­கூ­டிய உப­ரி­யி­னால் ஏற்­ப­டு­வது. 2018ல் அந்த உபரி கிடைத்­தால், மகிழ்ச்சி இரட்­டிப்­பா­கும்.-– ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

மூலக்கதை