இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை: பிபின் ராவத்

தினமலர்  தினமலர்
இந்தியா  சீனா ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை: பிபின் ராவத்

புதுடில்லி: இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே விரைவில் ஹாட்லைன் சேவை துவங்கப்பட உளளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா மற்றும் சீனா நாடுகளின் ராணுவத்துக்கு இடையில் விரைவில் ஹாட்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நாட்டு எல்லைகளில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து உடனடியாக தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். ஹாட்லைன் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் எடுத்து வருகிறது. சீனா ராணுவமும் இதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது என்றார்.

மூலக்கதை