உசிலம்பட்டி மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த போலீஸ் நடத்திய விளையாட்டு போட்டிகள்!

விகடன்  விகடன்
உசிலம்பட்டி மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த போலீஸ் நடத்திய விளையாட்டு போட்டிகள்!

காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் உசிலம்பட்டியில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  வட்டாரத்தில் கிராமங்கள் அதிகமுள்ளது. இப்பகுதி கிராம மக்களுக்கும், காவல்துறைக்கும்  பெரிய  இடைவெளி  உள்ளது. இந்த மனநிலையை மாற்றும் வகையில், உசிலம்பட்டி காவல்துறை சரகம் சார்பில் பொதுமக்களுக்குடன் நட்புணர்வை ஏற்படுத்த கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றப் போட்டிகளை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 15 அணிகள் பங்கேற்ற கபடிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பாப்பாபட்டி அணியும் நாட்டாமங்கலம் அணியும் மோதின. இதில் பாப்பாபட்டி அணி கோப்பையைக் கைப்பற்றினர். இதேபோல் 17 வயதுக்குட்பட்டோருக்கான கபடிப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் போலியம்பட்டி அணி மேக்கிலார்பட்டி அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. 17அணிகள் பங்கேற்ற ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் மெய்யணம்பட்டி அணி, வடக்கம்பட்டி அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதேபோல்,17வயதுக்குட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியில் நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, கோப்பையை கைப்பற்றினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உசிலம்பட்டி கோட்டாச்சியர் சுகன்யா, துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும் இதேபோன்ற போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் நட்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என காவல்துறையினர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மூலக்கதை