நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்

தினமலர்  தினமலர்
நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்

புதுடில்லி: நீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என காங்.தலைவர் ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ் வழங்கியுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது குறித்து காங்.தலைவர் ராகுல் கூறியது, சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும்,. சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மசாவு குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பா.ஜ. பதிலடிகொடுத்துள்ளது. பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, நீதித்துறைக்கு அப்பாற்ப்பட்டது அரசியல். நீதித்துறையின் உள்விவகாரங்களை காங்.தலைவர் ராகுல் அரசியலாக்குவது சரியல்ல. லோயா மர்மசாவு கோர்ட் விசாரணையில் இருப்பதால் இதனை எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க கூடாது என்றார்.

மூலக்கதை