மாவட்ட ஆட்சியர் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்!

விகடன்  விகடன்
மாவட்ட ஆட்சியர் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்!

   

 

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்பு உணர்வு தொடர்பான மாவட்ட அளவிலான கோலப் போட்டி நடந்தது. மேலும், சிறப்பு சுகாதாரப் பொங்கல் விழாவும் மாவட்ட ஆட்சித் தலைவர் லதா தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வு தொடர்பான மாவட்ட அளவிலான கோலப் போட்டியில் 86 குழுக்கள் கலந்து கொண்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு பெற்ற பருத்திக்கண்மாய் மல்லிகை குழுவிற்கு 4 கிராம் தங்கமும், இரண்டாம் பரிசு பெற்ற சிவகங்கை பெரியார் நகர் மலர்கள் குழுவிற்கு 2 கிராம் தங்கமும், மூன்றாம் பரிசு பெற்ற கல்லல் பெரியம்மை காசி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 1 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன. பின்னர் ஆறுதல் பரிசாக பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுகாதாரப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் 18 அரசுத் துறைகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசு கூட்டுறவுத் துறைக்கும், இரண்டாம் பரிசு ஊரக வளர்ச்சி முகமை துறைக்கும், மூன்றாம் பரிசு வருவாய்த் துறைக்கும் கிடைத்தன. மேலும், சிறப்பு பரிசு வேளாண்மைத் துறைக்கும். இந்த சிறப்புப் பொங்கல் விழாவில், ஆண்கள் - பெண்கள் லக்கி கார்னஸ் போட்டி, மியூசிக் சேர் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகளை வழங்கினார்.

மூலக்கதை