ஒதுங்கியது மத்திய அரசு:சரியாகி விடும்என்கிறார் வேணுகோபால்:நீதி துறையில் நடப்பது என்ன

தினமலர்  தினமலர்
ஒதுங்கியது மத்திய அரசு:சரியாகி விடும்என்கிறார் வேணுகோபால்:நீதி துறையில் நடப்பது என்ன

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான 4 மூத்த நீதிபதிகளின் கருத்துவேறுபாடு சில நாட்களில் சரியாகி விடும் என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார்.

நேற்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நீதித்துறையில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை வெளியிட்டனர். பின்னர் நீதிபதி சலமேஸ்வர் இல்லத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்: இது, மிகவும் அசாதாரண சூழ்நிலை. உச்ச நீதிமன்றத்தின் சில நிர்வாக செயல்பாடுகள் முறையாக இல்லை. குறிப்பாக, கடந்த சில மாதங்களில், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. நீதித் துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது என்றார்.

மத்திய அரசு ஒதுங்கியதுநாட்டையே அதிர வைத்த இந்த நிகழ்வு குறித்தும், நீதித் துறைக்குள் எழுந்துள்ள பிரச்னை; அதில் தலையிடுவதில்லை என்று மத்திய அரசு ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுடன், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா நேற்று ஆலோசனை நடத்தினார்.

சில நாட்களில் சரியாகிவிடும்


பின்னர் கே.கே. வேணுகோபால் கூறுகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்கள் முன்பாக குற்றம்சாட்டியது வருத்தத்திற்குரியது. கருத்துவறுபாடுகளை வெளிப்படையாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க கூடாது. மாற்று வழியை பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் கருத்துவேறுபாடுகள் சில நாட்களில் தீர்க்கப்படும் பொறுத்திருங்கள் என்றார்.
இது குறித்து நீதியரசர்கள். சீனியர் வழக்கறிஞர்கள் சிலரின் கருத்துகள் வருமாறு

முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜிநீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் தான் சென்றிருக்க வேண்டும் நீதித்துறையில் பிளவு ஏற்படக்கூடாது. ஆனால் நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசிநீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என சந்தேகம் உள்ளது. உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளின் புகார் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும்

பிள்ளையார் சுழி போட்ட கர்ணன்


நீதித்துறையில் நடைபெற்றதாக கூறப்படும், முறைகேடுகளை செய்தியாளர்களை சந்தித்து பேசி சிக்கலில் சிக்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன். அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது உசசநீதிமன்றம். சில நாட்கள் முன்புதான் விடுதலையானார். அப்போதே அவர் தூக்கிய போர்க்கொடி, மற்றும் அதிருப்திக் குரல் இப்போது வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.

ஆவேசப்பட்ட சீனியர் வழக்கறிஞர்கள்.முன்னதாக டில்லியில் யாருக்கு அதிகாரம் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அதிருப்தியடைந்த ராஜிவ் தவான், தலைமை நீதிபதியுடன் நடந்த வாதம், என மனதை அதிகளவில் புண்படுத்தி விட்டது 'இனி, வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடப் போவதில்லை' என கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி கூறினார்.

இவரைபோல மற்றொரு மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் , தீபக் மிஸ்ராவிடம் மிரட்டல் தொனியில் , எனக்கு வாதாட வாய்ப்பு தராத இந்த கோர்ட்டில் நீதி கிடைக்காது என ஆவேசமாக பேசி கோர்ட் அறையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார்.

மூலக்கதை