பிரான்ஸ், அமெரிக்க மாணவிகள் நெல் குத்தி பொங்கல் வைத்து கொண்டாட்டம்... களைகட்டிய கிராமம்!

விகடன்  விகடன்
பிரான்ஸ், அமெரிக்க மாணவிகள் நெல் குத்தி பொங்கல் வைத்து கொண்டாட்டம்... களைகட்டிய கிராமம்! 

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி கிராமத்தில் சிறப்புப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் மதுரை எல்.டி.சி கல்லூரி மாணவர்கள் பலரும் பாரம்பரிய முறைபடி நெல் குத்தி இளம நாயகி அம்மனுக்கு பொங்கல் வைத்து விழா கொண்டாடினர். தமிழக கலாசாரங்களை ஆய்வு செய்துவரும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவிகள் அரிட்டாபட்டியில் பொங்கல் வைத்து வெகு சிறப்பாக விழா கொண்டாடினர். அரிட்டாபட்டியின் வற்றாத குளமாகவும், தெய்வத்தின் தீர்த்தமாக கருதப்படும் தர்மகுளத்தில் நீரை பானையில் பிடித்தும், அரிட்டாபட்டி பறைகளில் நெல் இடிக்கும் குழிகளில் நெல்களை கொட்டி அதில் கிடைத்த அரிசியினை கொண்டு பொங்கல் இவர்கள் கொண்டாடியது மேலும் சிறப்பாக அமைந்தது.

 

இதில் ஏழுமலை பாதுகாப்பு குழுவைச் சார்ந்த ரவி, மகளிர் வட்டாரத்தலைவி முருகேஸ்வரி, அழகம்மாள், இளமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு கிராமத்தில் பொங்கல் விழா நடைமுறைகளைப் பற்றி விளக்கினர். அதற்கு முன்னதாக ஆய்வு மாணவிகள் அனைவரும் பறவைகள் காணுதல், குடைவரை கோயில்களின் சிறப்பை அறிதல், பிராமிய கல்வெட்டுகள் மற்றும் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும் அமெரிக்க, பிரான்ஸ் மாணவிகள் தமிழ் மாணவிகளோடு சேர்ந்து சிலம்பம் சுற்றுதல் பாண்டியாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாண்டு இன்புற்றனர்.

 


 

மூலக்கதை