'சாதாரண கைதியா நான்?' நீதிபதியிடம் லாலு புகார்

தினமலர்  தினமலர்
சாதாரண கைதியா நான்? நீதிபதியிடம் லாலு புகார்

ராஞ்சி : மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், தன்னை, சாதாரண கைதியை போல, சிறை அதிகாரிகள் நடத்துவதாக, சி.பி.ஐ., நீதிபதியிடம் புகார் கூறிஉள்ளார்.


மூன்றரை ஆண்டு:

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கை, ஜார்க்கண்ட், சி.பி.ஐ., நீதிமன்றம் விசாரிக்கிறது. இம்மாத துவக்கத்தில், லாலுவுக்கு, மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஷிவ்பால் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, ராஞ்சி மத்திய சிறையில், லாலு அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், மற்றொரு வழக்கிற்காக, சி.பி.ஐ., நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட லாலு, நீதிபதி, ஷிவ்பால் சிங்குடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

திறந்தவெளி சிறை:

அப்போது, அரசியல் கைதிகளுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவது உண்டு. ஆனால், தன்னை சாதாரண கைதியை போல நடத்துவதாகவும், கட்சி பிரமுகர்களை சந்திக்க அனுமதிப்பதில்லை என்றும் கூறினார். அதற்கு, திறந்தவெளி சிறைக்கு செல்லத் தயாரா? என, நீதிபதி கேட்டதற்கு, லாலு மறுத்துவிட்டார்.

மூலக்கதை