மாணவர்களின் சிலம்ப சங்கமத்துடன் நிறைவு பெற்றது கோவை விழா!

விகடன்  விகடன்
மாணவர்களின் சிலம்ப சங்கமத்துடன் நிறைவு பெற்றது கோவை விழா!

கோவை விழாவின் நிறைவு நாளையொட்டி, மாணவர்களின் சிலம்ப சங்கம நிகழ்ச்சி, வ.உ.சி மைதானத்தில் நடந்தது.

கோவையில், தனியார் அமைப்புகள் மற்றும் மாநகராட்சி இணைந்து 10-வது ஆண்டாக கோவை விழாவை நடத்தி முடித்துள்ளனர். கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்வில், சுமார் 170-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. டபுள் டக்கர் பஸ், தெருவோர ஓவியங்கள், பள்ளி மாணவர்களுக்கு உடல் பருமன் தடுப்பு குறித்த திட்டம் அறிமுகம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒரு வாரமாக நடந்துவந்த, கோவை விழா இன்றுடன் முடிவடைந்தது.

இதையொட்டி, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி சார்பில், வ.உ.சி மைதானத்தில், சிலம்ப சங்கம நிகழ்ச்சி இன்று மாலை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், ஸ்பைரல் வாள், கேடயச் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் சிலம்பம் தீ ஆகிய வீர விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மூலக்கதை