கேளிக்கைக்காக நபர் செய்த காரியம்! பதுளை மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்

PARIS TAMIL  PARIS TAMIL
கேளிக்கைக்காக நபர் செய்த காரியம்! பதுளை மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்

பதுளை பொது மருத்துவமனையில் திடீரென குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த மருத்துவமனையின் பாதுகாப்பு அவசர சமிக்ஞை ஒலித்தமையால் மருத்துவனையின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
இன்று காலை 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
இதனுடன் சத்திரச் சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களும் இதனால் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
மருத்துவமனைக்கு வந்த ஒருவர் கேளிக்கைக்காக பாதுகாப்பு அவசர சமிக்ஞையை அழுத்தியுள்ளதாக பின்னர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் சமிக்ஞையை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கடவு சொல்லையும் மறந்தமை காரணமாக சமிக்ஞை ஒலியை நிறுத்த சிறிது நேரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை