பிரேதப் பரிசோதனை நேரத்தில் உயிர்த்தெழுந்த நபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரேதப் பரிசோதனை நேரத்தில் உயிர்த்தெழுந்த நபர்!

ஸ்பெயினில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென உயிருடன் எழுந்திருக்கிறார்.
 
வடக்கு ஸ்பெயினிலுள்ள ஒவீடோ நகரில் உடல் பிரேதப் பரசோதனையின்போது நபர் விழித்தெழுந்தார்.
 
பரிசோதனை நடத்திக் கொண்டிருந்த அதிகாரிகள் அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
 
ஸ்பானிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, அந்த நபரின் பெயர் கொன்ஸாலோ மொன்டொயா. 29 வயதான அவர் உலோகத் துண்டுகளைத் திருடியதற்காகச் சிறை சென்றார்.
 

மூலக்கதை