வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியர்கள் இணைய வேண்டும்: பக்ரைனில் ராகுல்காந்தி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெறுப்பு அரசியலுக்கு எதிராக இந்தியர்கள் இணைய வேண்டும்: பக்ரைனில் ராகுல்காந்தி பேச்சு

மனாமா: வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் இணைய வேண்டும் என பக்ரைனில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்தி முதல் முறையாக தனது வெளிநாட்டு பயணமாக பக்ரைன் சென்றுள்ளார்.

அங்கு அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் ஹமத்தை சந்தித்தார். பின்னர் அங்கு வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது. உங்களது நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்சனைகள் உள்ளன அதேநேரத்தில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீங்களும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதையும் குறிப்பிடுகிறேன்.



வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள். நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் உங்களுக்கும், இந்தியாவிற்கும் நான் பாலமாக இருக்கவே இங்கு வந்துள்ளேன்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் முறையாக வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவானதாக இருக்கிறது. , வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குதலில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலை அரசியலையும் பிரிவினையையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.


.

மூலக்கதை