ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு திரு ரவி வெங்கடாச்சலம் 25 லட்சம் நன்கொடை வழங்கினார் ..

 

திரு ரவி வெங்கடாச்சலம் என் 30 ஆண்டுகால நண்பர். நேற்று அமெரிக்கா வாழ் தன் பேத்தியுடன் திருப்புவனம் ஆத்மநாதன் நடத்தும் 5 நாள் தமிழ் விழாவுக்கு வருகை தந்தார். (அவரது பேத்தியின் இசை நிகழ்ச்சி இன்று நடந்தது.) நேற்று அவரிடம் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய விவரங்களைச் சொன்னேன். “நான் ஒரு சிறிய அறிவிப்பு வெளியிடுவேன்” என்று சொன்னவர் இன்று “என் நண்பர் பாலச்சந்திரன் போல் நானும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் அளிக்கிறேன்” என்று எந்த ஆர்பபாட்டமும் இன்றி அமைதியாக அறிவித்தார்! ரவியின் கொடைப்பண்பும் அடக்க உணர்வும் தமிழ் ஆர்வமும் நம் அனைவரின் வணக்கத்திற்குரிய அரும் செயல். இன்றைய விழா ஃபெட்னாவின் கொடை. விழாவிற்கு வருகை தந்து தலைமை ஏற்ற SRM கல்விக்குழுமத்தின் தலைவர் திரு பாரிவேந்தர் தம் பல்கலைக்கழகத்தின் தமிழ்பபேராயம் வழி விரைவில் தங்கள் கொடை வரும் என்று நற்செய்தி சொன்னார். விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் திரு பாண்டிய ராஜன் தன் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் வளர்ச்சிக்கென ஆற்றும் ஆக்க பூர்வ செயல்களைப் பட்டியலிட்டு அனைவரையும் மகிழ்சசிக் கடலில் ஆழ்ததினார். “மெல்லத் தமிழ்இனி சாகாது; மெல்லத்தமிழ் இனி வாழும்” என்று தன் உரையை நிறைவு செய்தார். இவர் இத்துறையில் தொடர்ந்தால் “விரைந்து தமிழ் இனி வாழும்”. யாமினி என்ற இனிய தமிழ்ச்செல்வி தான் உண்டியலில் சேர்த்த ரூ.2,000/த்தை கொடையளித்த நிகழ்வு தமிழின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வளர்த்தது.கீழே யாமினியின் படம். -G.பாலச்சந்திரன், IAS, (Retd.)

திரு ரவி வெங்கடாச்சலம் என் 30 ஆண்டுகால நண்பர்.நேற்று அமெரிக்கா வாழ் தன் பேத்தியுடன் திருப்புவனம் ஆத்மநாதன் நடத்தும் 5 நாள் தமிழ் விழாவுக்கு வருகை தந்தார். (அவரது பேத்தியின் இசை நிகழ்ச்சி இன்று நடந்தது.) நேற்று அவரிடம் ஹார்வர்ட் தமிழ் இருக்கை பற்றிய விவரங்களைச் சொன்னேன்.


“நான் ஒரு சிறிய அறிவிப்பு வெளியிடுவேன்” என்று சொன்னவர் இன்று “என் நண்பர் பாலச்சந்திரன் போல் நானும் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் அளிக்கிறேன்” என்று எந்த ஆர்பபாட்டமும் இன்றி அமைதியாக அறிவித்தார்!

ரவியின் கொடைப்பண்பும் அடக்க உணர்வும் தமிழ் ஆர்வமும் நம் அனைவரின் வணக்கத்திற்குரிய அரும் செயல்.


இன்றைய விழா ஃபெட்னாவின் கொடை.


விழாவிற்கு வருகை தந்து தலைமை ஏற்ற SRM கல்விக்குழுமத்தின் தலைவர் திரு பாரிவேந்தர் தம் பல்கலைக்கழகத்தின் தமிழ்பபேராயம் வழி விரைவில் தங்கள் கொடை வரும் என்று நற்செய்தி சொன்னார்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் திரு பாண்டிய ராஜன் தன் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் வளர்ச்சிக்கென ஆற்றும் ஆக்க பூர்வ செயல்களைப் பட்டியலிட்டு அனைவரையும் மகிழ்சசிக் கடலில் ஆழ்ததினார்.“மெல்லத் தமிழ்இனி சாகாது;மெல்லத்தமிழ் இனி வாழும்” என்று தன் உரையை நிறைவு செய்தார்.இவர் இத்துறையில் தொடர்ந்தால் “விரைந்து தமிழ் இனி வாழும்”.

யாமினி என்ற இனிய தமிழ்ச்செல்வி தான் உண்டியலில் சேர்த்த ரூ.2,000/த்தை கொடையளித்த நிகழ்வு தமிழின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வளர்த்தது.கீழே யாமினியின் படம்.

 

-G.பாலச்சந்திரன், IAS, (Retd.)


 

மூலக்கதை