பாக்., தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி ; 44 பேர் காயம்

தினமலர்  தினமலர்
பாக்., தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி ; 44 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானில் உள் குவட்டா நகரில் உள்ள தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான குவட்டாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் விழா நெருங்கி வருகின்ற நிலையில், இன்று ஞாயிற்றுகிழமை நள்ளிரவு பிரார்த்தனைக்காக, முழு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.இது குறித்து பலுசிஸ்தான் மகாண உள்துறை அமைச்சர் மிர் சர்பராஸ் புக்டி கூறுகையில், இச்சம்பவத்தை அரங்கேற்றியிருப்பவர்கள் தற்கொலைப்படையைசேர்ந்த இருவர் ஈடுபட்டிருக்கலாம் என்றார்.
இச்சம்பவம் குறித்து பலுசிஸ்தான் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அன்சாரி கூறுகையில், குவட்டாவில் உள்ள பேத்தேல் நினைவு தேவாலயத்தில் 400 பேர் இருந்தனர். இந்நிலையில் துப்பாக்கிகளுடன் இருந்த இரு தற்கொலைப்படையினர் தேவாலயத்தில் நுழைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர தாக்குதல் வேட்டையை தொடங்கினர். இதில் தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவனை போலீசார் சுட்டு கொன்றுவிட்டனர் என்றார். இச்ம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை