ட்யூப்லைட் தோல்வி ஏன்? சல்மான் விளக்கம்

தினமலர்  தினமலர்
ட்யூப்லைட் தோல்வி ஏன்? சல்மான் விளக்கம்

சமீபத்தில் வெளியான சல்மான் கானின் ட்யூப்லைட் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சல்மான், ட்யூப்லைட் படம் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், எனது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போது ரம்ஜானுக்கு வெளியாகும் என் படங்கள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கமர்சியலான, பொழுதுபோக்குகள் நிறைந்த படமாக இருக்கும் என்பது தான். ஆனால் ட்யூப்லைட் குடும்ப படம். மனதை கசக்கும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்தது. அதனாலேயே இப்படம் தோல்வி அடைந்துள்ளது.

ரம்ஜானுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக தவறான படம் ரிலீஸ் செய்யப்பட்டதே இப்படத்தை தோல்வி அடைய செய்து விட்டது என்றார். இதற்கிடையில் டிசம்பர் 22 ம் தேதி சல்மான் கான் நடித்துள்ள டைகர் ஜிந்தா ஹை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மூலக்கதை