நைஸா...ரைஸா...!

தினமலர்  தினமலர்
நைஸா...ரைஸா...!

புன்னகையில் கோடி.... பூங்கவிதை பாடி... கண்கள் செல்லும் அவரை தேடி... என முணுமுணுக்க வைக்கும் அங்கமெல்லாம் தங்கமாக மின்னும் அழகுதேவதையோ.... முத்துக்கள் உதிர்க்கும் சிரிப்பில்... தித்திக்கும் வார்த்தைகளோ... வானத்து வண்ண நிலவோ.... வையத்து வாழ்பவளோ என எண்ணத்தோன்றுகிறது இவரை பார்த்த போது... அட போங்கய்யா' என பிக்பாசில்

அசால்ட்டாக சலிச்சு போய் பேசி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகை ரைஸா. மதுரை கல்லுாரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரைஸா, நைஸா தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக உதிர்த்த முத்துக்கள் தான் இனி வருவது...

* தமிழ் பெண்ணா நீங்க?

இல்லீங்க... பெங்களூரு தான் சொந்த ஊரு.

* பிக்பாஸ் வாய்ப்பு?

எதிர்பாராமல் அமைந்தது.

* அதில் கற்ற பாடம்?

நிறைய. பொருட்களை வீணாக்க கூடாது, தெளிவாக பேச வேண்டும் போன்ற பாலபாடங்களையும் தெரிந்து கொண்டேன்.


* ஆரவ் வெற்றி- எதிர்பார்த்தீர்களா?

இல்லை. சினேகன் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தேன்.

* பிக்பாசில் ஆபாச உடை அணிந்தனர் என்ற குற்றச்சாட்டு?

அப்படி ஒன்றும் எனக்கு தோணவில்லை. இருந்தாலும் அதை தானே ரசிகர்கள் பார்த்தாங்க... வழக்கமாக இருந்தால் பார்ப்பார்களா?

* மாடலிங் கனவா?

இல்லீங்க... பெங்களூரு கல்லுாரியில் இளங்கலை பயின்ற போது பாக்கெட் மணிக்காக மாடலிங் செய்தேன். அதுவே தொழிலாகி விட்டது.

* சினிமா?

'பியார் பிரேமம் காதல்' உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறேன்.

* பொழுது போக்கு?

சினிமா பார்ப்பேன். சமைப்பேன்.

* நன்றாக சமைப்பீங்களாமே?

சிக்கன் கறி நன்றாக சமைப்பேன்.


* பிடித்த உணவு?

இட்லி, தோசை

* பிடித்த நடிகர்?

ரஜினி


* அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்?

கரும்பு தின்ன கூலியா.... வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா.

* ரோல்மாடல்?

அப்படி யாரும் இல்லீங்க.


* லட்சியம்?

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாழ்க்கையை அனுபவிக்க

வேண்டும்.

* பெண்களுக்கு?

நான் கூட முன்பு அமைதியான பெண்ணுங்க... ஆனால் மாடலிங் வந்த பிறகு தான் உலகை தெரிந்து கொண்டேன். வாழ்க்கையே மாறி விட்டது. பெண்கள் எதற்கும் பயப்படக்கூடாது. தைரியமாக வீட்டை விட்டு வெளியே வாருங்கள்.

* குடும்பத்தினர் ஆதரவு?

ஏதோ பண்றாங்க... எல்லா குடும்பத்தினரை போல என் குடும்பத்திலும் கொடுக்கிறாங்க.

* மதுரை?

பாரம்பரியமான நகரம்... இங்கு வீசும் காற்றில் கூட அது நிறைந்திருக்கிறது.

* ரசிகர்கள்?

எமோஷனலா இருக்காங்க... பிக்பாசிலிருந்து வெளியே வந்ததும் அதிக போன்கள் மதுரையிலிருந்து தான் வந்ததுங்க...

மூலக்கதை