இங்கிலாந்தில் பாரிய வாகன விபத்து: 6 பேர் பலி!

PARIS TAMIL  PARIS TAMIL
இங்கிலாந்தில் பாரிய வாகன விபத்து: 6 பேர் பலி!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் இடம்பெற்றுள்ள பாரிய வாகன விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேற்கு மிட்லான்ட்ஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பர்மிங்ஹாம் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிய வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, பல வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்த விபத்துச் சம்பவத்தையடுத்து, பர்மிங்ஹாம் நகரின் பிரதான நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.
 

மூலக்கதை