சிந்து 2வது இடம்: பைனலில் போராடி தோல்வி

தினமலர்  தினமலர்
சிந்து 2வது இடம்: பைனலில் போராடி தோல்வி

துபாய்: உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் பைனலில் போராடி தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சிந்து 2வது இடம் பிடித்தார்.துபாயில், உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-3' இந்தியாவின் சிந்து, 2வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுசி மோதினர். இதில் ஒரு மணி நேரம், 34 நிமிடம் வரை நீடித்த போட்டியில், சிந்து 21-15, 12-21, 19-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

மூலக்கதை