ராகேஷ் ஓம்பிரகாஷ் படத்தில் ஷாகித் கபூர்

தினமலர்  தினமலர்
ராகேஷ் ஓம்பிரகாஷ் படத்தில் ஷாகித் கபூர்

ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஷாகித் கபூர் நடிக்க உள்ளாராம். இத தொடர்பாக ஷாகத்தும், ராகேசும் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சேர்ந்து படம் ஒன்றில் பணியாற்ற பேசி உள்ளனர். இருந்தும் அதிகாரப்பூர்வ செய்தி ஏதும் வெளியிடப்படவில்லை.

ராகேஷ் இயக்கிய கபடி படித்தை பார்த்த ஷாகித், அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். ராகேஷ் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு முதலில் ஹிருத்திக் ரோஷனிடம் தான் பேசினாராம். ஆனால் கால்சீட் பிரச்னையால் ஹிருத்திக் இப்படத்தில் இருந்து வெளியேறியதால், ஷாகித்தை நடிக்க வைக்க ராகேஷ் முடிவு செய்தாராம். இதற்கிடையில் ஷாகித் கபூர் நடித்துள்ள பத்மாவதி படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது.

மூலக்கதை