துல்கர் - லால்ஜோஸ் படம் கைவிடப்பட்டதா..?

தினமலர்  தினமலர்
துல்கர்  லால்ஜோஸ் படம் கைவிடப்பட்டதா..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் லால்ஜோஸ் டைரக்சனில் மோகன்லால் நடித்த வெளிப்பாடிண்டே புஸ்தகம் படம் வெளியானது. படம் சுமாராக போனாலும் ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் வேறொரு வகையில் அந்தப்படத்திற்கு புகழ் சேர்ந்தது. இந்தநிலையில் லால்ஜோசின் அடுத்த படத்தில் சீனியர் குணச்சித்திர நடிகரான சீனிவாசன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களாகவே இயக்குனர் லால்ஜோஸ் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிக்க, 'ஒரு பயங்கர காமுகன்' என்கிற படத்தை இயக்குவதாகத்தான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் துல்கர் சல்மான் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் கிட்டத்தட்ட அந்தப்படம் கைவிடப்பட்டது என்றே சொல்லப்படுகிறது இவர்கள் கூட்டணி ஏற்கனவே விக்ரமாதித்யன் என்கிற ஹிட் படத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை