இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்.,

தினமலர்  தினமலர்
இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்.,

ல­கில், சொகுசு கார் ரசி­கர்­கள் மத்­தி­யில், இத்­தா­லி­யைச் சேர்ந்த, மச­ராட்டி நிறு­வ­னத்­திற்கு, தனி இடம் எப்­போ­தும் உண்டு. சொகுசு, இட வசதி, அதி­வே­கம் ஆகிய மூன்­றும், ஒருங்கே அமைந்த காரை விரும்­பு­வோர், மச­ராட்­டியை தவ­ற­வி­டு­வ­தில்லை. இந்­நி­று­வ­னம் தற்­போது, இந்­தி­யா­வில் குவாட்­ர­போர்ட்டோ ஜி.டி.எஸ்.,’ சொகுசு, செடான் ரக காரை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. இதில், ‘கிரான்­லுஸ்ஸோ, கிரான்ஸ்­போர்ட்’ ஆகிய ரகங்­கள் உள்ளன.கிரான்­லுஸ்­ஸோ­வில், முன்­புற ஸ்பாய்­லர்; கிரோம் பினிஷ் பம்­பர்; காரின் நிறத்­தில் அமைந்த, சைடு ஸ்கர்ட்ஸ்; ‘கிரான்­லுஸ்ஸோ’ என்ற ஆங்­கில எழுத்­துக்­கள் மற்­றும், 20 அங்­குல, ‘அலாய் வீல்ஸ்’ உள்­ளிட்ட அம்­சங்­கள் இடம் பெற்­றுள்ளன. கிரான்ஸ்­போர்ட்­டில், ‘ஸ்போட்ஸ்’ அம்­சங்­கள் சற்று துாக்க­லாக உள்ளன.இந்த கார்­களில், 8.4 அங்­குல அகல, ஆண்ட்­ராய்டு மற்­றும் ஆப்­பிள் கார்­பிளே தொடு­திரை இன்­போ­டெ­யின்­மென்ட்; 10 ஸ்பீக்­கர்; 900 வாட்; கார்­டன் ஆடியோ சிஸ்­டம் பொருத்­தப்­பட்டு உள்­ளது. தேவைப்­பட்­டால், 15 ஸ்பீக்­கர், 1,280 வாட், பொவர்ஸ் மற்­றும் வில்­கின்ஸ் சர்­ர­வுண்டு சிஸ்­டம், ஆப்­ஷ­னும் உண்டு. இதில், வழக்­கம் போல், 530 எச்.பி., திற­னு­டைய, 3.8 லி., டுவின் டர்போ வி8 இன்­ஜின்; எரி­பொ­ருள் சேமிப்­புக்கு உத­வும், 8 ஸ்பீடு ஆட்­டோ­மேட்­டிக் கியர் ஆகி­யவை இடம் பெற்­றுள்ளன.இவற்­றின் விலை, அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. உத்­தே­ச­மாக, டில்லி ஷோரூ­மில், 2.7 கோடி ரூபா­யில் இருந்து துவங்­கக் கூடும்.

மூலக்கதை