பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் - தொடர்ந்தும் அதிகரிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள்  தொடர்ந்தும் அதிகரிப்பு!!

பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. 
 
2016 ஆன் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, இவ்வருட நவம்பர் மாதத்தில் 30 வீதமான புகார்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு பின்னர் பல்வேறு தரப்பில் இருந்து பெண்கள் தங்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக புகார்கள் அளித்து வருகின்றனர். அதன் பின்னர் காவல்துறையினரிடம் புகார்கள் அளிப்பது கணிசமாக அதிகரித்து வந்தது. இவ்வருட நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தம் 4,207 புகார்கள் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது 2016 ஆம் ஆண்டு நவம்பரில் 3,238 ஆக இருந்தது. 
 
முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கூட இது 23. 8 வீதத்தால் அதிகரித்திருந்தது. 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 3,349 புகார்களும், 2017 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 4,148 புகார்களும் அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை