சரக்கு போக்குவரத்து சேவையில் ஜன., 1 முதல், ‘இ – வே’ ரசீது

தினமலர்  தினமலர்
சரக்கு போக்குவரத்து சேவையில் ஜன., 1 முதல், ‘இ – வே’ ரசீது

புதுடில்லி:சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கான, ‘இ – வே’ ரசீது நடை­முறை, ஜன., 1 முதல்,
அம­லுக்கு வர உள்­ளது.ஜி.எஸ்.டி.,யில், ஒரு மாநி­லத்­திற்கு உள்­ளா­கவோ அல்­லது மாநி­லங்­க­ளுக்கு இடை­யிலோ, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேற்­பட்ட மதிப்­புள்ள சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு, ‘இ – வே’ ரசீது அவ­சி­யம். சரக்கு சப்­ளை­யர், ‘ஆன் லைன்’ மூலம் இந்த ரசீதை தயா­ரித்து, அதன் நகலை, சரக்­கு­டன் அனுப்ப வேண்­டும்.

இத­னால், ஒரு சரக்கு எந்த இடத்­தில் இருந்து, யார் மூலம், யாரை சென்­ற­டை­கிறது என்­பதை, வரி அதி­கா­ரி­கள், ‘ஆன் லைன்’ மூலம் சுல­ப­மாக கண்­கா­ணிக்­க­லாம்.வரி ஏய்ப்பை தடுக்­கும் இத்­திட்­டம், 2018 ஜன., 1 முதல், அம­லுக்கு வர உள்­ளது. இன்று, மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யில், ஜி.எஸ்.டி.,கவுன்­சில் கூட்­டம், ‘வீடியோ கான்­ப­ரன்­சிங்’ மூலம் நடை­பெற உள்­ளது.

அப்­போது, ‘இ – வே’ ரசீது அமல்­ப­டுத்­து­வது குறித்து முடி­வெ­டுக்­கப்­படும் என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

மூலக்கதை