மொபைல் போன், ‘டிவி’ இறக்குமதி வரி அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மொபைல் போன், ‘டிவி’ இறக்குமதி வரி அதிகரிப்பு

புதுடில்லி:உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரிக்­கும் நோக்­கில், மத்­திய நிதி அமைச்­ச­கம், மொபைல் போன், புரொ­ஜக்­டர், ‘டிவி’ உள்­ளிட்ட, மின் சாத­னங்­களின் இறக்­கு­மதி மீதான சுங்க வரியை உயர்த்தி உள்­ளது.

இது குறித்து, மத்­திய வரு­வாய் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாட்டு உற்­பத்­தியை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு சில வகை மின் சாத­னங்­களின் இறக்­கு­மதி வரியை உயர்த்­தி­யுள்­ளது. இதன்­படி, ‘டிவி’க்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த சுங்க வரி, 10 சத­வீ­தத்­தில் இருந்து, 15 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது.

கம்ப்­யூட்­டர் மானிட்­டர், புரொ­ஜக்­டர் மீதான சுங்க வரி, இரு மடங்கு உயர்த்தி, 20 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. தொலை­பேசி மற்­றும் மொபைல் போன் இறக்­கு­மதி வரி, ௧5 சத­வீ­த­மாக விதிக்­கப்­பட்டு உள்­ளது. வாட்­டர் ஹீட்­டர், முடி அழ­கு­ப­டுத்­தும் கருவி ஆகி­ய­வற்­றின் மீதான சுங்க வரி, இரட்­டிப்­பாகி, 20 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இது தவிர,
மின்­சார சாத­னங்­களில் பயன்­ப­டுத்­தும், ‘பில­மென்ட்­டு­கள்,’ மின் விளக்­கு­கள் உட்­பட, சில மின் சாதன பொருட்­க­ளுக்­கும், சுங்க வரி அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை