காலாகண்டியில் முதலில் நடிக்க இருந்தவர் பவாத் கான்

தினமலர்  தினமலர்
காலாகண்டியில் முதலில் நடிக்க இருந்தவர் பவாத் கான்

சைப் அலிகான் நடிப்பில் உருவாகி வரும் படம் "காலாகண்டி". சைப் உடன், தீபக் டேப்ரியால், விஜய் ராஸ், குணால் ராய் கபூர், சோபிதா துலிபாலா, அக்ஷ்ய் ஓபராய், இஷா தல்வார், அமைரா தஸ்தூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்சத் வர்மா இயக்கி உள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அக்சத், காலாகண்டி படத்தின் கதை 2013-ம் ஆண்டிலே தயாரானது. அப்போது இந்தப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை நடிக்க வைக்க முயற்சித்தேன், ஆனால் நடக்கவில்லை. அதன்பின்னர் தான் சைப் அலிகானை இப்படத்தில் நடிக்க வைத்தேன். படமும் நன்றாக வந்துள்ளது என்றார்.
காலாகண்டி படம் அடுத்தாண்டு, ஜன., 12-ம் தேதி ரிலீஸாகிறது.

மூலக்கதை