மம்முட்டியை ஓவர்டேக் செய்த ஜெயசூர்யாவின் 'ஆடு'

தினமலர்  தினமலர்
மம்முட்டியை ஓவர்டேக் செய்த ஜெயசூர்யாவின் ஆடு

மலையாளத்தில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக ஜெயசூர்யாவின் 'ஆடு-2' படம் ரிலீசாக இருக்கிறது.. இது கடந்த வருடம் வெளியாகி ஓரளவு சுமாராக ஓடிய ஜெயசூர்யாவின் 'ஆடு ஒரு பீகர ஜீவியானு' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வரவேற்பு எந்த அளவுக்கு என்றால், டிரைலர் வெளியான 2௦ மணி நேரத்திற்குள்ளாகவே பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்கு முன்னதாக குறுகிய காலத்தில் இந்த இலக்கை தொட்டு சாதனை செய்திருந்த மம்முட்டியின் 'மாஸ்டர்பீஸ்' படத்தின் சாதனையை ஜெயசூர்யாவின் 'ஆடு-2' ஓவர்டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை