அறிமுக படத்திற்கே ரசிகர்கள் சிறப்பு காட்சி..!

தினமலர்  தினமலர்
அறிமுக படத்திற்கே ரசிகர்கள் சிறப்பு காட்சி..!

இன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எல்லாம் ரிலீஸ் அன்று தனியாக ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுவது வாடிக்கையாகி விட்டது. மலையாளத்தில் தற்போது வளர்ந்து முன்னணி நடிகர்களாக வலம்வரும் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி ஆகியோர் எல்லாம் தங்களை நிரூபித்த பின்னரே அவர்களுக்கு இந்த சாதனை சாத்தியமானது. ஆனால் மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கதாநயாகனாக அறிமுகமாகும் 'ஆதி' படத்திற்கு ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரியில் வெளியாக உள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

மூலக்கதை