Millas விபத்து! - 1982 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறும் மிக மோசமன சிறுவர் விபத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
Millas விபத்து!  1982 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறும் மிக மோசமன சிறுவர் விபத்து!!

Millas இல் நேற்று இடம்பெற்றிருந்த விபத்து குறித்து முன்னதாக தகவல்களை வழங்கியிருந்தோம். தற்போது 1982 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெறும் மிக மோசமான சிறுவர் விபத்து என இச்சம்பவம் பதிவாகியுள்ளது. 
 
நேற்று வியாழக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக,  Pyrénées-Orientales மாவட்டத்தின் Millas நகரில், தொடரூந்து கடவை ஒன்றை கடக்க முயன்ற மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேரூந்து தொடரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு மாணவர்கள் கொல்லப்ப்ட்டும், 7 பேர் காயமடைந்தும் இருந்தனர். ஜூலை 31, 1982 ஆம் ஆண்டு Beaune நகரில் இதுபோன்றதொரு விபத்து இடம்பெற்றிருந்தது. A6 வீதியில் இட்ம்பெற்ற இந்த விபத்தில் பல்வேறு வாகனங்கள் மோதுப்பட்டு சிதைவுக்குள்ளாந்து. 
 
இந்த விபத்துக்கு பின்னர், 2000, 2008, 2014, 2016 போன்ற் ஆண்டுகளில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளான போதும், தற்போது இடம்பெற்ற விபத்தே மிக மோசமான விபத்தாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

மூலக்கதை