பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி: ம.பி.முதல்வர் சவுகான் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி: ம.பி.முதல்வர் சவுகான் அறிவிப்பு

போபால்: மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பள்ளி, கல்லூரிகளில் தற்காப்பு கலை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.   மத்திய பிரதேசத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மாநிலத்தில் ஆளும் பாஜ அரசு அண்மையில் சட்டசபையில் நிறைவேற்றியது. இதனை பாராட்டி பெண்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இதை பாராட்டு விழாவாக எடுக்காமல் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பிரசார களமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன்.

மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பள்ளி, கல்லூரிகளில் தற்காப்பு கலை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். 2012 டிசம்பர் 16-ம் தேதி டெல்லி மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமையை நாடு மறந்திருக்காது.

மரண தண்டனை குறித்து தற்போது பல தளங்களில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மரண தண்டனை குற்றவாளிகள் மனித மிருகங்கள், உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்.

இவ்வாறு சவுகான் பேசினார்.

.

மூலக்கதை