100 நாள் வேலை திட்ட பயனாளிகள் சாலை மறியல்: கும்மிடிப்பூண்டி அருேக பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
100 நாள் வேலை திட்ட பயனாளிகள் சாலை மறியல்: கும்மிடிப்பூண்டி அருேக பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த  பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி வசிக்கும் பயனாளிகளுக்கு இரண்டு பிரிவாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சாலையோரத்தில் வைக்கப்பட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை  மட்டுமே உள்ளது. இதனால் ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 10 பேருக்கு மட்டுமே வேலை முடியும் என வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த  பயனாளிகள் 65க்கும் மேற்பட்டோர் பெத்திக்குப்பம் மேம்பாலம்  அருகே இன்று காலை திரண்டனர்.



திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு அப்பகுதி பெரியவர்கள் பயனாளிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பிரச்னை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனுகொடுங்கள். சாலை மறியல் செய்வது பிரச்னைக்கு தீர்வாகாது என கூறினர்.

இதனால் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை