திடீர் வேகமெடுக்கும் ராம்சரண்

தினமலர்  தினமலர்
திடீர் வேகமெடுக்கும் ராம்சரண்

தனி ஒருவன் தெலுங்கு ரீ-மேக்கான துருவா படத்திற்கு பிறகு ராம் சரண் தேஜா நடிப்பில் இந்தாண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. தன் தந்தை நடித்த கைதி நம்பர் 150 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது தன் தந்தையை வைத்து சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரிப்பதுடன் ரங்கஸ்தலம், போயாபதி மற்றும் பெயரிடப்படாத புதிய படம் என மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். ரங்கஸ்தலம் படம் பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. அடுத்தாண்டு மார்ச்சில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 2017-ல் ஒரு படம் கூட ரிலீஸாகததால் 2018-ல் இந்த மூன்று படத்தையும் ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று ஓய்வின்றி நடித்து வருகிறார்.

மூலக்கதை