தெலுங்கில் கல்லா கட்டுமா பத்து எண்றதுக்குள்ள?

தினமலர்  தினமலர்
தெலுங்கில் கல்லா கட்டுமா பத்து எண்றதுக்குள்ள?

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம்-சமந்தா நடித்த படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் சமந்தா, நாயகி - வில்லி என இரண்டு விதமான மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார். படம் பெரிதாக ஓடவில்லை என்றபோதும், சமந்தாவின் வில்லி வேடம் பேசப்பட்டது.

இதேப்படம் தெலுங்கில் டென் என்ற பெயரில் டப்பாகி இன்று(டிச., 15) வெளியாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 170 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். விக்ரம் படங்கள் தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதன்முறையாம்.

மூலக்கதை