சல்மான் கான் தயாரிக்கும் லவ்ராத்திரி

தினமலர்  தினமலர்
சல்மான் கான் தயாரிக்கும் லவ்ராத்திரி

சல்மான் கான், தனது தங்கை அப்ரிதா கானின் கணவரான ஆயுஷ் சர்மாவை ஹீரோவாக பாலிவுட்டில் அறிமுகம் செய்கிறார் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் இப்போது படத்தின் பெயரை சல்மான் கான் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சல்மானின் ஐந்தாவது பட தயாரிப்பாக லவ்ராத்திரி உருவாகிறது. இதில் ஆயுஷ் சர்மாவை அறிமுகம் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

லவ்ராத்திரி படத்தை அபிராஜ் மினாவாலா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு, பிப்ரவரி முதல் ஆரம்பமாகிறது.

மூலக்கதை