சூப்பர் ஹீரோ படத்தில் நடிப்பாரா ஹிருத்திக்?

தினமலர்  தினமலர்
சூப்பர் ஹீரோ படத்தில் நடிப்பாரா ஹிருத்திக்?

கிரிஷ் படங்களின் வரிசையில் சூப்பர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். தற்போது கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை படமான சூப்பர் 30 எனும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான சஜித், தனது அடுத்தப்படத்தில் ஹிருத்திக்கை நடிக்க அணுகியுள்ளார். இப்படம் சூப்பர் ஹீரோ கதையாக உருவாக உள்ளது. டெய்சி பாய்ஸ், டிஸ்யூம் படங்களின் இயக்குநர் ரோகித் தவான் இயக்க உள்ளார். ஹிருத்திக் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லவில்லை என்றாலும், சஜித் மற்றும் ரோகித் இருவரும் அவரை நடிக்க வைக்க தீவிர முயற்சியில் இறங்கி ஈடுபட்டுள்ளனர்

மூலக்கதை