மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு

பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது.

மதுக்குடித்தல், மதுபானங்கள் கடத்தல் போன்றவற்றுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
மதுக்கடத்தலை தடுக்க சிறப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன.

எனினும் தற்போது கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுவிலக்கு அமலில் உள்ளதால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாகவும், பெண்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு உள்ளதாக தெரிவித்த நிதிஷ்குமார், தற்போது ஆங்காங்கே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் கவலை அளிப்பதாக கூறினார்.



மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை