கூகுளுக்கு போட்டியாக மைக்ரேசாப்ட்டின் தேடு பொறி

தினமலர்  தினமலர்
கூகுளுக்கு போட்டியாக மைக்ரேசாப்ட்டின் தேடு பொறி

போஸ்டன் : உலக அளவில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் தேடு பொறி (search engine) கூகுள். ஒரு விஷயத்தை பற்றிய தகவல் அறிய வேண்டும் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதும் கூகுள் தேடு பொறி தான். இந்த நிலையை மாற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கூகுளுக்கு போட்டியாக "பிங்" (Bing) என்ற தேடு பொறியை மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இது தேடு பொறி துறையில் 3வது இடத்தில் உள்ளது. கூகுளை விட, பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்பமான ஆதாரத்தையும் பிங் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மைக்ரோசாப்ட்டின் நுண்ணறிவு ஒருங்கிணைப்பு பிரிவின் துணை தலைவர் ஜோடி ரிபாஸ் கூறுகையில், உண்மையான ஒரு தகவலை மக்களுக்கு தரும் பொறுப்பு தேடு பொறிக்கு உள்ளது. ஒரு விஷயத்தை தேடும் போது, அது பற்றி எத்தனை லிங்க்.,கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. அந்த லிங்க்.,களுக்குள் சென்று தேடுவதற்கும் பலரும் விரும்புவதில்லை.

இதனை கருத்தில் கொண்டு நம்பகமான, உறுதியான ஆதாரங்களுடனான தகவலை எளிமையாக தர வேண்டும் என்பதற்காக இந்த தேடு பொறியை உருவாக்கினோம். பயன்படுத்துவோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் புதிய திறன்கள் கொண்டதாக இதை வடிவமைத்துள்ளோம். விரைவில் அடுத்தடுத்து பல வகையிலும் மேம்படுத்த உள்ளோம் என்றார்.

மூலக்கதை