மொபைல் போன், டிவி.,க்கான சுங்க வரி உயர்வு

தினமலர்  தினமலர்
மொபைல் போன், டிவி.,க்கான சுங்க வரி உயர்வு

புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் மொபைல் போன்கள், டிவி, மைக்ரோவேக் ஓவன் ஆகியவற்றிற்கான சுங்கவரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்தில் கொண்டு வரப்பட்ட விதியின்படி மொபைல் போன்களுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்த 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலர் டிவி மற்றும் மைக்ரேவேவ் ஓவனுக்கான சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எனவும், ஏற்கனவே இந்த பொருட்களின் உற்பத்தியில் இந்தியாவில் கடும் போட்டி நிலவுவதால் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்க இது உதவிகரமாக அமையும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன்களுக்கான சுங்க வரியில் மத்திய அரசு இந்த ஆண்டு துவக்கத்தில் முதல் முறையாக மாற்றம் கொண்டு வந்தது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை