குளிர்க்கால கூட்டத் தொடரில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல், புயலால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி: மக்களவை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் டெல்லியில் தொடங்கியது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் இருந்ததால், குளிர்க்கால கூட்டம் கடந்த மாதம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், குளிர்கால கூட்டம் இன்று தொடங்கி, ஜனவரி 5ம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 14 புதிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மக்களவையில் பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியுள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை அறிமுகப்படுத்தி மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், டிசம்பர் 18ம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். ஆசியக் கோப்பை ஹாக்கி, குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வீராங்கனைகளுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவில் புயலால் உயிரிழந்தோருக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஓகி புயல் தாக்கியதில் 60 பேர் இறந்தனர் மற்றும் 33000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். புயலால் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மூலக்கதை