இந்திய ரூபாய் மதிப்பில் தொடர் உயர்வு : 64.11

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் தொடர் உயர்வு : 64.11

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்றும்(டிச.,15) ஏற்றமான போக்கே காணப்படுகிறது. நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வெற்றி பெறும் என தெரியவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இதனால் இந்திய ரூபாய் மதிப்பும் உயர்ந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து 64.11 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 64.34 ஆக இருந்தது. வட்டிவிகித கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப் போவதில்லை என ஐரோப்பிய மததிய வங்கி அறிவித்துள்ளதால் யூரோவுக்கு எதிரான டாலரின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மூலக்கதை