மிகுந்த பரபரப்பிற்கிடையே இன்று துவங்குகிறது பார்லி.குளிர்கால கூட்டத்தொடர்:

தினமலர்  தினமலர்
மிகுந்த பரபரப்பிற்கிடையே இன்று துவங்குகிறது பார்லி.குளிர்கால கூட்டத்தொடர்:

புதுடில்லி: அரசியல் பரபரபிற்கிடையே இன்று பார்லி., குளிர்கால கூட்டம் துவங்குகிறது. இக் கூட்டத்தொடரில் முத்தலாக், திருநங்கைகளுக்கான உரிமை குறித்த சட்ட மசோதா தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது.

பார்லிமென்ட்டின் குளிர்காலகூட்டத்தொடர் இன்று டிச.,15 துவங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்புஅளி்க்கும் வகையிலான முத்தலாக் சட்ட திருத்தம் மற்றும் திருநங்கைகளுக்கான உரிமை குறித்த மசோதாக்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது.மேலும் வெளிநாட்டில் வசித்து வரும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது குறித்த சட்டம் , ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு லோக்சபாவில் நிலுவையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட மசோதாஉட்படபல்வேறு சட்ட மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் பார்லி கூடும் நிலையில் குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை பாக்., தூதர் சந்தித்தாக கூறிய விவகாரம் இரு அவைகளிலும் பிரச்னையை கிளப்பும் என்பதால் அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

மூலக்கதை