மொத்த விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மொத்த விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி:நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், நவம்­ப­ரில், 3.93 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 3.59 சத­வீ­த­மா­க­வும், 2016 நவம்­ப­ரில், 1.82 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது.
மதிப்­பீட்டு மாதத்­தில், வெங்­கா­யம் மற்­றும் காய்­க­றி­கள் விலை அதி­க­ரிப்­பால், மொத்த விலை பண­வீக்­கம், 0.34 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. நவம்­ப­ரில்,வெங்­கா­யம் விலை, 178.19 சத­வீ­தம் உயர்ந்­து உள்­ளது.

காய்­க­றி­கள் பண­வீக்­கம், 36.61 சத­வீ­தத்­தில் இருந்து, 59.80 சத­வீ­த­மாக ஏற்­றம் கண்­டுள்­ளது.
அதே சம­யம், முட்டை, மாமி­சம் மற்­றும் மீன் விலை, 5.76 சத­வீ­தத்­தில் இருந்து, 4.73 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.உண­வுப் பொருட்­கள்பண­வீக்­கம், 4.30 சத­வீ­தத்­தில் இருந்து, 6.06 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. தயா­ரிப்பு பொருட்­களின் பண­வீக்­கம், ஏற்ற, இறக்­க­மின்றி, 2.61 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. இது, அக்­டோ­ப­ரில், 2.62 சத­வீ­த­மாக இருந்­தது.நவம்­ப­ரில், நாட்­டின் சில்­லரை விலை பண­வீக்­கம், 15 மாதங்­களில் இல்­லாத அள­வாக, 4.88 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை