‘விரைவில் 7 சதவீத வளர்ச்சியை நாடு எட்டும்’

தினமலர்  தினமலர்
‘விரைவில் 7 சதவீத வளர்ச்சியை நாடு எட்டும்’

புதுடில்லி:‘நாட்­டின், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, அடுத்த சில காலாண்­டு­களில் அதி­க­ரித்து, வளர்ச்சி பாதையை எட்­டும்’ என, ஸ்டாண்­டர்டு சார்ட்­டடு வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அதன் விப­ரம்:

உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சி­யின் சரி­வு­கள் முடிந்து, அடுத்த சில காலாண்­டு­களில், 7 சத­வீத வளர்ச்­சியை, நாடு எட்­டும். நாட்­டின் உற்­பத்தி வளர்ச்சி, மோச­மான காலத்தை தாண்­டி­விட்­டது.
இருப்­பி­னும், அடுத்த சில காலாண்­டு­களில், வளர்ச்சி பாதைக்கு திரும்பி, 7 சத­வீத
வளர்ச்­சியை எட்­டும் என்­றா­லும், 7.5 சத­வீத வளர்ச்­சியை எட்­டு­வ­தற்கு, மேலும் சில ஆண்­டு­கள் பிடிக்­கும்.

அர­சின் முக்­கி­ய­மான கொள்கை முடி­வு­க­ளால் ஏற்­பட்ட சுணக்­கங்­கள் நீங்கி, வளர்ச்சி பாதைக்கு திரும்­பு­வ­தற்கு, குறைந்­த­பட்­சம், நான்­கி­லி­ருந்து ஆறு காலாண்­டு­கள் பிடிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.ஏப்., – ஜூன் வரை­யி­லான வளர்ச்சி, 13 காலாண்­டு­களில் இல்­லாத வகை­யில், 5.7 சத­வீ­தத்தை தொட்­டது. தற்­போது, அதி­லி­ருந்து மீண்டு வரு­கிறது. ஜூலை – செப்., வரை­யி­லான காலத்­தில், வளர்ச்­சி­யா­னது, 6.3 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தது.

அரசு, தைரி­ய­மான சில முடி­வு­களை எடுத்து அமல்­ப­டுத்தி வரு­கிறது. குறிப்­பாக, ஜி.எஸ்.டி., திவால் சட்­டம் ஆகி­யவை, மிக தைரி­ய­மான முடி­வு­க­ளா­கும். இத­னால், நாட்­டின் பொரு­ளா­தா­ரம் குறு­கிய காலத்­துக்கு சிர­மங்­களை சந்­தித்­தா­லும், நாட்­டின் வளர்ச்­சிக்கு உர­மாக, இந்த முடி­வு­கள் இருக்­கும்.ஆனால், எப்­படி இருந்­தா­லும், 7.5 சத­வீத வளர்ச்­சியை எட்ட, இன்­னும் சில ஆண்­டு­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

மேலும், 2019ல் பொதுத் தேர்­தல் வரு­கிறது. இது, அர­சின் கொள்கை முடி­வு­க­ளால் உரு­வாகி வரும் நல்ல தாக்­கத்தை தாம­தப்­ப­டுத்­தக் கூடும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை